Breaking News

நியூசிலாந்தில் இன்றைய கொவிட் நிலவரம்...!!!

நியூசிலாந்தில் இன்றைய கொவிட் நிலவரம்...!!!

இன்று நியூசிலாந்தில் 45 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் சமூகத்தில் ஒமிக்ரோன் தொற்றுகளின்  எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 34 ஒமிக்ரோன் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 22 பேரும், வைகாடோவில் 02 பேரும், Bay of Plenty இல் 03 பேரும், Rotorua வில் 07 பேரும், Taranaki  இல் ஒருவரும், Hawke's Bay இல் 08 பேரும், Nelson Marlborough வில் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உட்பட 05 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமூகத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 11,601 ஆகும்.

மேலும் தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 15,466 ஆகும்.

நாட்டில் நேற்றையதினம் 13,995 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதனிடையே 5 முதல் 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 25 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் 50,946 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.