Breaking News

நியூசிலாந்தின் கோடைக்கால விழாக்கள் மற்றும் பிரதமரின் திருமணம் இரத்து...!!

நியூசிலாந்தின் கோடைக்கால விழாக்கள் மற்றும் பிரதமரின் திருமணம் இரத்து...!!

இன்று இரவு முதல் நாடு சிவப்பு விளக்கு அமைப்பிற்கு நகர்வதால் கோடை விழாக்கள், நிகழ்வுகள் மற்றும் பிரதமரின் திருமணம் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஸ்ப்லோர் ஃபெஸ்டிவல் 2022 இரத்து செய்யப்பட்டதாக இன்று மதியம் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே ஜனவரி 29 சனிக்கிழமையன்று ஆக்லாந்தின் கரங்கஹாபே சாலையில் நடைபெறவிருக்கும் அதர்ஸ் வே திருவிழா திட்டமிட்டபடி நடைபெறாது என்று அதன் ஏற்பாட்டாளர்கள் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

நியூசிலாந்து மாஸ்டர்ஸ் போட்டியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5 முதல் 13 வரை டன்னீடனில் போட்டிகள் நடைபெறவிருந்தன, ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது குறித்த போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை ஒத்தி வைத்திருப்பதாக இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்ட் உடனான தனது திருமணத்தை நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.