Breaking News

மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை100 டொலராக உயரும் சாத்தியம்

மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை100 டொலராக உயரும் சாத்தியம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலராக அதிக்கும் சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏழு வருடங்களில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் உச்சத்தை எட்டியுள்ள மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, விரைவில் 100 டொலரை தாண்டக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் முதல் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலரை எட்டவில்லை. எவ்வாறாயினும், இந்தஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெ யின் விலை 15 சதவீதத்தால் அதிகரித்து 88 டொலராக உள்ளது.

அவ்வாறே, அமெரிக்க டபிள்யூ. ரீ.ஐ. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 14 சதவீதத்தினால் அதிகரித்து 85.55 டொலராக உள்ளது.