Breaking News

மின் உற்பத்தி காரணமாக நீர்த்தேக்கங்களில் வறட்சி - கொழும்புக்கான குடிநீரின் அளவை மட்டுப்படுத்த வேண்டிய நிலை

மின் உற்பத்தி காரணமாக நீர்த்தேக்கங்களில் வறட்சி  - கொழும்புக்கான குடிநீரின் அளவை மட்டுப்படுத்த வேண்டிய நிலை

கொழும்புக்குத் தேவையான குடிநீரின் அளவை மட்டுப் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.

நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதே இதற்குக் காரணம்.

கொழும்புக்கு நீர் வழங்கும் களனி ஆற்றுக்கு நீர் வழங்கும் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக் கங்கள் வேகமாக வறண்டு போவதால் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்துக்குள் குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின் உற்பத்திக்கும் நீர் அதிகளவில் பயன்படுத்தப்படு வதால், வறண்டு போகும் விகிதத்துக்கு ஏற்ப மின் உற்பத்தியை மட்டுப்படுத்தி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டியது அவசியமாகும் எனவும் திடீர் மழை பெய்யாவிட்டால் நீர்மட்டம் மேலும் குறையும் என்றும் அப்பேச்சாளர் மேலும் கூறினார்.