Breaking News

“கஞ்சா” இனி ஆபத்தான போதைப் பொருளாக கருதப்படமாட்டாது - ஐ. நா சபை!

“கஞ்சா” இனி ஆபத்தான போதைப் பொருளாக கருதப்படமாட்டாது - ஐ. நா சபை!

 

கஞ்சா தொடர்பான உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு இணங்க, அதிக ஆபத்துள்ள போதை பொருள் பட்டியலில் இருந்து "கஞ்சா" வினை அகற்ற ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

ஹெராயின் போன்ற கொடிய போதை பழக்கமுள்ள போதை பொருள் பட்டியலில் இருந்து "கஞ்சா" அகற்றப்படுகிறது.

 

போதைப்பொருள் ஆணையத்தின் 53 உறுப்பு நாடுகளில் 27 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, 25 உறுப்பினர்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர்.

 

கஞ்சா இனி ஆபத்தான போதை பொருளாக கருதப்படாது என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
59 ஆண்டுகளாக “கஞ்சா” உயர் ஆபத்து பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.