Breaking News

பிரித்தானியாவில் கக்குவான் இருமலால் 5 சிறுவர்கள் உயிரிழப்பு...!!

பிரித்தானியாவில் கக்குவான் இருமலால் 5 சிறுவர்கள் உயிரிழப்பு...!!

பிரித்தானியாவில் பரவிவரும் “100 நாள் இருமல்” என கூறப்படும் கக்குவான் இருமல் தொற்று காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயிரிழப்புக்கள் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரையான மூன்று மாதங்களில் பதிவானவை என UK Health Security Agency தெரிவித்துள்ளது.

அதேவேளை பிரித்தானியாவில், இவ்வாண்டு 2,700-க்கும் மேற்பட்ட கக்குவான் இருமல் கிருமி வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, மார்ச் மாத இறுதி வரை 2,793 வழக்குகள் பதிவாகியுள்ளதாக UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

இது கடந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும் என குறிப்பிடப்படுகின்றது. “கக்குவான் இருமல் கிருமி தொற்றானது, அனைத்து வயதினரையும் பாதிக்கும். எனினும், சிறு குழந்தைகளுக்கு இதன் தாக்கம் அதிகம் என UKHSA ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்காலிக தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மட்டும் 1,319 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், ஜனவரியில் 556 தொற்றாளர்களும், பெப்ரவரியில் 918 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.