Breaking News

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது சொட்டு அடுத்த மாதம்...

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது சொட்டு அடுத்த மாதம்...

நாட்டு மக்களுக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டை அடுத்த மாதம் 19 ஆம் திகதி பின்னர் வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர கொழும்பில் ​நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக தெரிவிக்கையில், சீனா பாமின் தடுப்பூசியின் முதல் சொட்டு மருந்துகள் எதிர்வரும் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.

ஏப்ரல் 19 ஆம் திகதி வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ள 2 ஆவது கொவிட் தடுப்பூசி மருந்து நாட்டில் உண்டு. உலக சுகாதார அமைப்பு 12 வாரங்களின் பின்னர் இந்த 2 ஆவது சொட்டை வழங்குவது பொருத்தமானது என சிபாரிசு செய்துள்ளது. 12 வாரங்களின் பின்னர் 2 ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் பட்சத்தில் முடிந்த வரையில் விரைவாக அதனை பெற்றுக்கொள்வதன் மூலம் நோயேதிர்ப்பு சக்தியை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ,சீனா பாமிடம் இருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களை அடையாளம் கண்டு நாம் இதனை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.