Breaking News

இலங்கை பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை கணித்த உலக வங்கி...!!

இலங்கை பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை கணித்த உலக வங்கி...!!

இலங்கை

இலங்கையின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் (2024) ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் 2.2% மிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி கணித்துள்ளது.

2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்நோக்கிய பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த நிலைமையை காண முடிவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், இலங்கையில் இன்னும் உயர் வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சந்தை பிரச்சினைகள் காணப்படுவதாக உலக வங்கியின் சமீபத்திய ஈராண்டு வளர்ச்சி மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.