Breaking News

Northland நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது...!!

Northland நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது...!!

ஞாயிற்றுக்கிழமை Northland நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக Kaikohe இல் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tawa தெருவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் நபர் ஒருவருக்கு ஒரு காலில் சூட்டு காயம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர் விமானம் மூலம் Whangārei மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று Kaikohe மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனிடையே பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி நிருபர் - புகழ்