Breaking News

Henderson இல் வீடொன்று தீப்பிடித்ததில் ஒருவர் உடல் கருகி பலி...!!

Henderson இல் வீடொன்று தீப்பிடித்ததில் ஒருவர் உடல் கருகி பலி...!!

மேற்கு ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Henderson இல் வீடொன்று தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீயில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை இன்று பிற்பகலில் மீட்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Henderson இல் உள்ள Rathgar சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு 12.40 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.

இந்நிலையில் இன்று பிற்பகல் குறித்த வீட்டில் காட்சிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எங்கள் எண்ணங்களும் அனுதாபங்களும் உயிரிழந்த நபரின் குடும்பத்துடன் இருக்கும் என‌ பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்