Breaking News

இலங்கையில் மீனவர்களின் ஊடாக பிரவேசிக்கும் வீரியம் கொண்ட கொரோனா...

இலங்கையில் மீனவர்களின் ஊடாக  பிரவேசிக்கும் வீரியம் கொண்ட கொரோனா...

நீண்ட நாட்கள் கடலுக்கு செல்லும் மீனவப் படகில் பயணிக்கும் மீனவர்களின் ஊடாக, கொரோனா புதிய வீரியம் கொண்ட வைரஸ் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ,சர்வதேச கடல் எல்லைக்குள் சென்று மீண்டும் நாடு திரும்புகின்ற மீனவர்கள் மற்றும் துறைமுகத்திற்கு வருகைத் தரும் சர்வதேச நாடுகளின் மீன்பிடி படகுகளில் பணியாற்றும் மீனவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

மேலும் ,மீனவர்கள் உரிய முறையில் தனிமைப்படுத்தப்படாமை மற்றும் இலங்கை மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் வெளிநாட்டு மீனவர்களுடன் தொடர்புகளை பேணி, பின்னர் நாட்டிற்குள் வருகைத் தருவதும் பாரிய அச்சுறுத்தலான நடவடிக்கை என அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக, புதிய வீரியம் கொண்ட வைரஸ், நாட்டிற்குள் பரவும் அபாயம் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

குறித்த மீனவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.