Breaking News

இரண்டு புதிய வகை பல்லி இனங்கள் கண்டுபிடிப்பு

இரண்டு புதிய வகை பல்லி இனங்கள் கண்டுபிடிப்பு

அம்பாறை – அத்தகல காப்புக்காடு மற்றும் குருநாகல் – கல்கிரிய வனப் பகுதியில் இருந்து இரண்டு புதிய கெக்கோ எனப்படும் பல்லி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அத்தகல காப்புக்காட்டில் இனங்காணப்பட்ட பல்லிக்கு ஜெயவீர என்றும், கல்கிரிய காப்புக்காட்டில் இனங்காணப்பட்ட பல்லிக்கு நாணயக்கார என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலியலாளர்களான சாந்தசிறி ஜயவீர மற்றும் ஆனந்த லால் நாணயக்கார ஆகியோரால் இந்த அரியவகை இனம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் குறித்த வனப்பகுதியில் குரங்குகள் அதிகளவு இருப்பதால் புதியவகை பல்லிகளுக்கு அச்சுறுத்தல் அதிகமுள்ளது என சுற்றுச்சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.