Breaking News

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை குறைந்தது

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை குறைந்தது

இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கின் மொத்த விற்பனை விலை 80-100 ரூபாய் அளவில் குறைவடைந்துள்ளது.

அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கின் மொத்த விற்பனை விலை தற்போது 100 ரூபாவாக நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இறக்குமதி செய்யப்படுகின்ற வெங்காயம் கிலோ ஒன்று 130 ரூபாவாகவும், சீனி கிலோ ஒன்று 205 ரூபாவாகவும் மொத்தவிலை குறைவடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.