Breaking News

சன்ன ஜயசுமன, ரொஷான் ரணசிங்கவுக்கு புதிய அமைச்சுப் பதவிகள்

சன்ன ஜயசுமன, ரொஷான் ரணசிங்கவுக்கு புதிய அமைச்சுப் பதவிகள்

சுகாதாரத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் மீண்டும் சேவைக்கு திரும்பும் வரை பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னதாக அவர் மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் ராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.

ரொஷான் ரணசிங்க மாகாண சபைகள் மற்றும் உள்ளளூராட்சி அலுவல்கள் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழின்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.