Breaking News

தெஹிவளை மிருககாட்சி சாலையில் பெரும் குழப்பநிலை- பணிப்பாளருக்கும் ஊழியர்களிற்கும் இடையில் மோதல்

தெஹிவளை மிருககாட்சி சாலையில் பெரும் குழப்பநிலை- பணிப்பாளருக்கும் ஊழியர்களிற்கும் இடையில் மோதல்

இலங்கையின் தேசிய உயிரியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகத்திற்கும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உயிரியல் திணைக்கள ஊழியர்களிற்கும் இடையிலான மோதல் காரணமாக தெகிவளை மிருககாட்சிசாலையில்உள்ளவிலங்குகளின் உயிர்களிற்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மிருககாட்சிசாலையில் உள்ள விலங்குகளை பணயம் வைத்து இரு தரப்பினரும் தங்கள் கோரிக்கைகளை வெல்ல முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மிருகக்காட்சிசாலையினால்நியமிக்கப்பட்ட விலங்குமருத்துவர்சமீபத்தில் சில விலங்குகள் உயிரிழந்துள்ளமை  குறித்து உரிய விசாரணைகளைமேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ள ஊழியர்கள்  தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை தங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால்  மிருகக்காட்சி சாலையில் உள்ள உயிரினங்களிற்கு உணவு வழங்குவதை நிறுத்தப்போவதாக ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சிபி ரட்ணாயக்க மிருக்கக்காட்சி சாலையில் உயிரினங்களிற்கு உணவு வழங்குவதற்காக சிறையில் உள்ள கைதிகளை பயன்படுத்த தயங்மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
மிருகங்களை கையாள்பவர்கள் மிருகங்கள்குறித்துஅக்கறையில்லாமல்அவஅவற்றிற்கு உணவு வழங்காமல் துன்புறுத்த நினைத்தால் நான் சிறைக்கைதிகளை பயன்படுத்துவேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நான் முன்னர் கால்நடைகள்தொடர்பான அமைச்சராக பணியாற்றியுள்ளேன்-விலங்குகள் பறவைகளிற்கு உணவு வழங்காததை பார்க்கும்போது வேதனையாக உள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் கடந்தகாலங்களில் ஏதாவது விலங்குகள் உயிரிழந்திருந்தால் அவர்கள் பிரதேசபரிசோதனை அறிக்கையை அரசாங்கத்தின் இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்குமாறு கோரலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விலங்குகள் உள்ள பகுதிகளிற்கான நீர்விநியோகம்துண்டிக்கப்பட்டுள்ளது - விலங்குகள் உள்ள கூடுகளின் பூட்டுகள் மாற்றப்பட்டுள்ளன இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தவிர ஏனையவர்கள் கூடுகளிற்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நான் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் நான் எவருக்கும் பக்கச்சார்பாக செயற்படப்போவதில்லை என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.