Breaking News

டொலர் ஒன்றின் பெறுமதி இலங்கை ரூபா 300 ஐ தொடும் அபாயம்! ஜிஎஸ்பி பிளஸ் ஐ இழந்தால் இதுதான் நிலைமையாம்

டொலர் ஒன்றின் பெறுமதி இலங்கை ரூபா 300 ஐ தொடும் அபாயம்!  ஜிஎஸ்பி பிளஸ் ஐ இழந்தால் இதுதான் நிலைமையாம்

ஐரோப்பா வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இலங்கை இழந்தால் டொலர் ஒன்றின் மதிப்பு ரூ. 300 ஐ கடந்து செல்லக்கூடும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சலுகையினூடாக வரி செலுத்தாலம் ஐரோப்பாவிற்கு பொருட்களை அனுப்பக்கூடிய அனுமதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், கொரோனா பரவல் காரணமாக இலங்கை பொருளாதாரம் ஆபத்தில் இருக்கும் நேரத்தில் இந்த சலுகையின் இழப்பு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு தமது வேலைகள் இழக்க நேரிடும் என்றும், சூழ்நிலையை எதிர்கொண்டு சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.