Breaking News

வீணான வார்னர் விளாசல்! 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி

வீணான வார்னர் விளாசல்!  6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி

ஐபிஎல் 14வது சீசனின் 6வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து  முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.