Breaking News

விஜய்க்கு தங்கையாக மறுத்த இவானா - பிரபலத்தின் 16 வயது மகளுக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பு...!!

விஜய்க்கு தங்கையாக மறுத்த இவானா - பிரபலத்தின் 16 வயது மகளுக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பு...!!

நடிகர் விஜய், தற்போது 'G.O.A.T' படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் ஷுட்டிங் கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 'G.O.A.T' படத்தின் அதகளமான லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

'G.O.A.T' படத்தில் விஜய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வயதான மற்றும் மிகவும் இளமையான தோற்றங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் ஒரு கதாபாத்திரம் நெகட்டிவ் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 'G.O.A.T' குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா, இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பரதநாட்டிய நடனக்கலைஞர் மற்றும் மாடலான அபியுக்தா, 'G.O.A.T' படத்தில் விஜய்யின் தங்கையாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இவர் யார் என தற்போது சோஷியல் மீடியாவில் வலைவீசி தேடி வருகின்றனர் ரசிகர்கள்.

முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் இவானாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தற்போது ஹீரோயினாக நடித்து வருவதால் அவர் விஜய்க்கு தங்கையாக நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் தான் அபியுக்தா நடிக்கவிருக்கிறார்.

'G.O.A.T' படத்தில் விஜய்யுடன் ஜெயராம், மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன் மற்றும் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.