Breaking News

விஜயகாந்த் மறைவு - படப்பிடிப்பை நிறுத்தி விட்டு புறப்பட்டு வரும் ரஜினிகாந்த்...!!

விஜயகாந்த் மறைவு - படப்பிடிப்பை நிறுத்தி விட்டு புறப்பட்டு வரும் ரஜினிகாந்த்...!!

விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு ரஜினிகாந்த் சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

நாகர்கோயிலில் மீண்டும் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் தொடங்கி இருந்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கே மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு செட்டில் ரெடியாகி இருந்த ரஜினிகாந்துக்கு விஜயகாந்த் மறைவு செய்து காதுகளுக்கு எட்டியதும் அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த் படப்பிடிப்பை உடனே நிறுத்த சொல்லி விட்டு அங்கே இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.