Breaking News

அட இவங்களா? இவங்க பயங்கரமான ஆளாச்சே! - தளபதி 68 இல் இணைந்த ரம்யா கிருஷ்ணன்...!

அட இவங்களா? இவங்க பயங்கரமான ஆளாச்சே! - தளபதி 68 இல் இணைந்த ரம்யா கிருஷ்ணன்...!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் ஷுட்டிங் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யும், வெங்கட் பிரபுவும் முதன்முறையாக 'தளபதி 68' படத்தில் இணைந்துள்ளார். இந்த காம்போ கோலிவுட் வட்டாரத்தினர் இடையில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் நிலையில், தற்போது பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் ரம்யா கிருஷ்ணன், அண்மையில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். 'படையப்பா' படத்திற்கு பின்னர் இந்த காம்போ இணைந்தது ரசிகர்கள் இடையில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியது. இந்நிலையில் ரஜினியை தொடர்ந்து தற்போது விஜய்யின் 'தளபதி 68' படத்தில் இணைந்துள்ளது ரசிகர்கள் இடையில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் ஜெயராம், மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், விடிவி கணேஷ், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி அமரன் மற்றும் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் மூலமாக விஜய்யுடன் இணைந்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.