Breaking News

தனுஷ் வழியை பின்பற்றும் கார்த்தி - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் வழியை பின்பற்றும் கார்த்தி - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் தான் பையா.

லிங்குசாமி இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். யுவனின் இசை, கார்த்தி மற்றும் தமன்னாவின் நடிப்பு, லிங்குசாமியின் இயக்கம் என அனைத்தும் இப்படத்தில் சிறப்பாக அமையவே பையா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

இன்றளவும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக பையா இருந்து வருகின்றது. இதனை உணர்ந்த லிங்குசாமி தற்போது பையா படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். சமீபகாலமாக தமிழில் பல படங்கள் ரீரிலீசாகி வருகின்றது. ரஜினியின் பாபா படத்தில் துவங்கி தனுஷின் 3 படம் வரை பல படங்கள் சமீபகாலமாக மறு வெளியீடு செய்யப்பட்டு வருகின்றது.

குறிப்பாக தனுஷின் 3 திரைப்படம் வெளியான போது வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தற்போது மறு வெளியீட்டில் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது. சென்னையில் பல திரையரங்கங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக 3 திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதைத்தொடர்ந்து கார்த்தியின் பையா திரைப்படமும் ரீரிலீஸாகவுள்ளதால் இப்படமும் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது இருக்கும் 2K கிட்ஸ் ரசிகர்கள் காதல் படங்களை விரும்பி பார்ப்பதால் கார்த்தியும் தனுஷ் வழியை பின்பற்றி தன் காதல் படமான பையா படத்தை ரீரிலீஸ் செய்யவுள்ளார் என ரசிகர்கள் சிலர் பேசி வருகின்றனர். இதையடுத்து இப்படத்தின் ரீரிலீஸ் திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.