Breaking News

நெல்சன் திலீப்குமாரின் அடுத்த படத்தின் ஹீரோ யார்? - அவரே சொன்ன அப்டேட்..!!

நெல்சன் திலீப்குமாரின் அடுத்த படத்தின் ஹீரோ யார்? - அவரே சொன்ன அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் நெல்சன். இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு பிறகு நெல்சன் யாருடன் இணைவார், அவரின் அடுத்த பட ஹீரோ யார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரம் முதல் ரசிகர்கள் வரை அனைவரிடமும் இருந்து வந்தது.

நெல்சனும் தன் அடுத்த படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார். இதையடுத்து தற்போது தன் அடுத்த படத்தை பற்றி பேசியுள்ளார் நெல்சன்.

சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட நெல்சன் தன் அடுத்த படத்திற்கான கதையை தற்போது எழுதி வருவதாகவும், அடுத்த மாதம் தன் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். அநேகமாக நெல்சனின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாகவே தனுஷ் மற்றும் நெல்சனின் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வந்தன. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் பேசப்பட்டு வந்தது. எனவே இவர்களின் கூட்டணியை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.