Breaking News

காழ் - புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை போராட்டத்தை காட்டும் ஆஸ்திரேலிய தமிழ் திரைப்படம்...!!

காழ் - புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை போராட்டத்தை காட்டும் ஆஸ்திரேலிய தமிழ் திரைப்படம்...!!

GM Films International மற்றும் SKKA Films இணைந்து தமிழ் ஆஸ்திரேலிய அம்சமான காழ் (Kaazh) என்ற திரைப்படத்தை வெளியிட உள்ளது.

இயக்குனர் மோகன்ராஜ் VJ இன் (Mohanraj VJ) இயக்கத்தில் உருவாகியுள்ள காழ் (Kaazh) திரைப்படம், புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியதாகும்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் படமாக்கப்பட்ட இப்படம், இயக்குனரின் சொந்த அனுபவங்களை கொண்டு, ஒரு தமிழ் தம்பதியின் கனவுகள், போராட்டங்கள் மற்றும் ஒரு சர்வதேச மாணவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை சித்தரிக்கிறது.

வெளிநாட்டில் வாழ்பவர்கள் எல்லாம் சொர்க்கத்தில் இருப்பது போல கற்பனை செய்து கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவர்களுடைய வாழ்க்கையும் ஒரு போராட்டமாகவே இருக்கிறது என்பதை இப்படம் அழகியலோடு ஒரு திரைக்கதையாக கூறுகிறது.

இந்த படத்தில் தமிழ் தம்பதியினராக பிரபல நடிகர் மற்றும் பாடகரான யுகேந்திரன் வாசுதேவன் (Yugendran Vasudevan) மற்றும் மிமி லியோனார்ட் (Mimi Leonard) நடித்துள்ளனர்.

மேலும் சர்வதேச மாணவராக சித்தார்த் அன்பரசு  (Siddarth Anbarasu) நடித்துள்ளார்.

காழ் (Kaazh) திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 05, 2024 அன்று இந்தியாவின் சென்னையில் மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், பெப்ரவரி 24 2024 சனிக்கிழமை அன்று திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.