Breaking News

ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை - சட்டசபையில் வேல்முருகன் ஆக்ரோஷம்...!!

ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை - சட்டசபையில் வேல்முருகன் ஆக்ரோஷம்...!!

இந்தியா: தமிழ்நாடு

ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் இன்றைய சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது...

தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களின் நியாயமான அபிலாைஷகளை, கோரிக்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இம்மாமன்றம் இயற்றுகிறது. இந்த சட்டங்களை இயற்றி தமிழ்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் தலைவராக இருக்கும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம். ஆளுநர் அதற்கு உடனடியாக கையெழுத்திட்டு தமிழக அரசு சட்டம் கொண்டு வருவதை உறுதி செய்ய தான் அவர் இருக்கிறார்.

ஆனால் அவர் தனது கடமையை, பணியை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி எடுத்து கொண்ட உறுதிமொழியை செய்யத்தவரும் பட்சத்தில் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் வகையில் இந்த பேரவை விதி 143 விதியின் கீழ் மறுஆய்வு செய்ய இங்கு கூடியிருக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டம் உட்பிரிவு 200ன் கீழ் சட்டங்களை இயற்று ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளோம்.

இந்த 10 மசோதாவை ஆய்வு செய்து நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எமது கட்சியின் சார்பிலும் மக்களின் சார்பிலும், ஜனநாயக மக்களின் சார்பிலும், இந்திய அரசியலமைப்பு சட்டங்களை ஏற்றுக்கொண்டு நடக்கும் மக்களின் சார்பிலும் கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

முதல்வரால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாக்கள் மக்களுக்கானது. மண்ணுக்கானது. குறிப்பாக கல்வி, ஆராய்ச்சி, மருத்துவமனை போன்ற சட்டங்களை எந்த காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்பதை நாடே அறியும். இந்த 10 மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதால் ஆளுநருக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.