Breaking News

உக்ரைனுக்கு 10 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்...!!!

உக்ரைனுக்கு 10 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்...!!!

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வருகிறது. எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனுக்கு 1.2 பில்லியன் யூரோ (இந்திய பண மதிப்பில் சுமார் 10,138.80 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் கமிஷன் புதிய அவசர கால நிதியாக இதை வழங்க பரிந்துரை செய்துள்ளது.

இந்தத் தகவலை ஐரோப்பிய ஒன்றியம் கமிஷன் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமியாவை தன்னுடன் இணைத்தபோது, உக்ரைனுக்கு 17 பில்லியன் யூரோ அளவில் ஐரோப்பிய ஒன்றியம் கடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.