Breaking News

ஊழல் நாடுகளின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானுக்கு எத்தனையாவது இடம்??

ஊழல் நாடுகளின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானுக்கு எத்தனையாவது இடம்??

உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

ஆய்வின் அடிப்படையில் 100 மதிப்பெண்களை பெறும் நாடு ஊழலற்ற நாடு என்றும், மதிப்பெண் எதுவும் பெறாமல் இருக்கும் நாடு ஊழல் அதிகமுள்ள நாடு என்றும் வரிசைப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான, உலக நாடுகளின் ஊழல்கள் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் தரவரிசை 16 இடங்கள் சரிந்து 28 மதிபெண்களுடன் 140 ஆவது இடத்துக்கு வந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு பட்டியல்படி பாகிஸ்தான் 31 மதிப்பெண்களுடன் 124 இடத்தில் இருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 40 மதிப்பெண்களுடன் 85 ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் அதிகபட்சமாக 88 மதிப்பெண்களுடன் டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகியவை மிகவும் குறைவாக லஞ்சம் நிலவும் நாடுகள் பட்டியலில் முதலிடங்களில் உள்ளன. மிக அதிக அளவில் லஞ்சம் நிலவும் நாடாக 11 மதிப்பெண்களுடன் தெற்கு சூடான் உள்ளது குறிப்பிடத்தக்கது.