Breaking News

மனம் விட்டு பேசி அழுவதற்கு அழுகை அறையை அறிமுகப்படுத்திய ஸ்பெயின்

மனம் விட்டு பேசி அழுவதற்கு அழுகை அறையை அறிமுகப்படுத்திய ஸ்பெயின்

மனம் விட்டு பேச யாருமில்லை என்ற கவலையை போக்க CRYING ROOM என்ற முறையை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ விசித்தரமான பிரச்சனைகள் வருவதுண்டு. ஆனால் அவை எதிர்கொள்ள பலர் தயாராக இல்லை என்பதும்,மனரீதியாக பாதிக்கப்படுவதும் உண்டு.

இது போன்ற செயற்கை முறை வாழ்க்கையால் மக்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது மட்டுமன்றி மன இறுக்கம், சோர்வு, மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

இதைப்போக்க மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்காக CRYING ROOM என்ற ஒரு அறையை உருவாக்கி அவர்களை அறையில் அடைத்து தான் விரும்பும் நபரை தொடர்பு கொண்டு கண்ணீர் விட்டு பேச வைப்பதால் மன இறுக்கம் உள்ளிட்ட உளவியல் ரீதியான பிரச்சனைகள் குறைவதாக மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஸ்பெயின் நாட்டில் CRYING ROOM என்ற அறையை உருவாக்கியுள்ளனர்.

மனம் விட்டு பேச ஆளில்லையே என்ற கவலையில் உள்ளவர்களுக்காக இந்த அறையை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.