Breaking News

ஆதிகாலம் முதல் தற்போது வரையிலான மதுபானங்களுக்கு பிரத்யேக மியூசியம் - எங்கு தெரியுமா??

ஆதிகாலம் முதல் தற்போது வரையிலான மதுபானங்களுக்கு பிரத்யேக மியூசியம் - எங்கு தெரியுமா??

ஆதிகாலம் முதல் தற்போது வரையிலான அனைத்து வகையிலான மதுபானங்களுக்கும் பிரத்யேகமான மியூசியம் ஒன்று கோவாவில் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடரில் பின்னடைவை சந்தித்துள்ள சுற்றுலா துறைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் அனைத்து வகையான மதுபானங்களுக்கு மட்டுமான அருங்காட்சியகமாக இது அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகத்துக்கு ‘All About Alcohol’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வடக்கு கோவாவில் உள்ள காண்டொலிம் கிராமத்தில் நந்தன் குத்சத்கார் என்ற தொழிலதிபர் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.

இந்த அருங்காட்சியகத்தில் கோவாவின் பாரம்பரிய மதுபானமான ஃபெனி முதல் சர்வதேச மதுபான பிராண்டுகள் வரை அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோவாவில் மதுபானத்துடன் தொடர்புடைய வரலாற்றை பறைசாற்றுவதே இந்த அருங்காட்சியத்தின் நோக்கம் என அதை அமைத்த தொழிலதிபர் நந்தன் தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்திலும், ரஷ்யாவிலும் மதுவை கொண்டாடுகின்றனர். அவர்கள் மதுபானங்களை பெருமையாக காட்சிப்படுத்துகின்றனர்.

ஆனால் இந்தியாவில் மதுபானம் வேறு ஒரு கோணத்தில் பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவின் முதல் மதுபான அருங்காட்சியகத்தை அமைக்க முடிவு செய்தேன். கோவா மக்களுக்கு மது என்பது விருந்தோம்பலின் அடையாளம் அதை மெய்ப்பிப்பது போல இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் அனைவருக்கும் ஃபெனி மதுபானம் தான் வெல்கம் ட்ரிங்க் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.