Breaking News

உலகின் பிரபலமான நிச்சயதார்த்த மோதிரம் யாருடையது தெரியுமா?

உலகின் பிரபலமான நிச்சயதார்த்த மோதிரம் யாருடையது தெரியுமா?

 

உலகின் மிகப் பிரபலமான நிச்சயதார்த்த மோதிரமாக  பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனின் நிச்சயதார்த்த மோதிரம், தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

 

சுமார் 2000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி இத்  தகவல் வெளியாகியுள்ளது. 12 கரட் நீல மாணிக்கக்கல் மீது 14 வைரங்கள் பதிக்கப்பட்ட இம் மோதிரம் மறைந்த இளவரசி டயனா அணிவித்திருந்தது ஆகும்.

 

இம் மோதிரத்தை 2010ஆம்  ஆண்டு நடைபெற்ற நிச்சயதார்த்தின்போது இளவரசர் வில்லியம், கேத்தரினுக்கு அணிவித்தார்.

 

மேலும், இந்த பட்டியலின் 2ஆவது இடத்தில் இளவரசர் ஹாரியின் மனைவி மேகனின் நிச்சயதார்த்த மோதிரம் இடம்பெற்றுள்ளது.