Breaking News

சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு...!!

சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு...!!

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.