Breaking News

அஜித் மச்சினனுடன் காதலா?; பரவும் வதந்தி - யாஷிகா அம்மா கொடுத்த விளக்கம்...!!

அஜித் மச்சினனுடன் காதலா?; பரவும் வதந்தி - யாஷிகா அம்மா கொடுத்த விளக்கம்...!!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷிக்கு திரௌபதி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

மோகன் ஜி இயக்கிய வெளியான இத்திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் ரிச்சர்டின் எதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

திரௌபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படமும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக ரிச்சர்ட் உருவாகி உள்ளார்.

சமீபத்தில் ரிச்சர்ட் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இணையத்தில் பரவி வரும் இந்த வதந்தி குறித்து யாஷிகாவின் அம்மா, பிரபல செய்தி நாளிதழ் ஒன்றுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், இணையத்தில் வரும் பல செய்திகளை நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த செய்தி உண்மையில்லை, இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது என்றார். சோஷியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக பரவிய செய்திக்கு யாஷிகாவின் அம்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.