Breaking News

Blenheim இல் உள்ள Vape கடையில் மூன்று முறை இடம்பெற்ற திருட்டு - மேலும் இருவரை கைது செய்த பொலிஸார்..!!

Blenheim இல் உள்ள Vape கடையில் மூன்று முறை இடம்பெற்ற திருட்டு - மேலும் இருவரை கைது செய்த பொலிஸார்..!!

Blenheim இல் உள்ள ஒரு Vape (புகைப்பிடிக்கும் கருவி)  கடையில் எட்டு நாட்களில் நடந்த மூன்று திருட்டுகளை தொடர்ந்து Marlborough பொலிசார் மேலும் இருவரைக் கைது செய்துள்ளர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை குறித்த கடை உடைக்கப்பட்ட பின்னர் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் இளைஞர் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே இன்று மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.