Breaking News

6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடம்..!!

6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடம்..!!

இந்தியா: தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் 3-ம் இடம் பிடித்து நாம் தமிழர் கட்சி கவனம் ஈர்த்துள்ளது. நடந்து முடிந்த 2024-ம் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கியது. மேலும் புதிதாக ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தில் போட்டியிட்டது.

இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிந்து நேற்று முடிவுகள் வெளியானது. இதில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியிருந்தாலும் 6 தொகுதிகளில் 3-ம் இடத்தை பிடித்து கவனம் ஈர்த்துள்ளது.

அந்த வகையில் கன்னியாகுமரி - 52,677, கள்ளக்குறிச்சி - 73,652, நாகப்பட்டினம் - 1,31,294, ஈரோடு - 80,255, திருச்சி - 1,07,458, புதுச்சேரி - 38,938 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இதில் 2 இடங்களில் அதிமுகவையும், 2 இடங்களில் தமாகாவையும், தலா ஒரு இடங்களில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள 33 மக்களவை தொகுதிகளிலும் 4-ம் இடத்தை பிடித்தது.

முன்னதாக திருச்சி மக்களவைத் தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் கணிசமான வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.