ஏர் நியூசிலாந்து விமானம் இந்தோனேசிய மாகாணமான பாலிக்கு செல்லும் வழியில் மின்னல் தாக்குதலுக்குள்ளானதை அடுத்து ஆக்லாந்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விமானம் பாதுகாப்பாக ஆக்லாந்தில் தரையிறங்கியது, இப்போது பொறியியல் சோதனைகளுக்கு உட்படுதப்பட்டுள்ளது.
ஆக்லாந்தில் இருந்து பாலி நோக்கி பயணித்த குறித்த ஏர் நியூசிலாந்து விமானம் NZ64 மின்னல் தாக்கி மீண்டும் ஆக்லாந்திற்கு திருப்பி விடப்பட்டது.
இதன் விளைவாக பாலியில் இருந்து ஆக்லாந்திற்கு வரும் NZ65 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
ஏர் நியூசிலாந்து இப்போது ஆக்லாந்து மற்றும் பாலி ஆகிய இரு நகரங்களிலும் உள்ள அடுத்த விமானங்களில் வாடிக்கையாளர்களை மீண்டும் பயணிக்க வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
செய்தி நிருபர் - புகழ்