Breaking News

ஆக்லாந்து பேருந்துகளில் பெண்களை அநாகரீகமாகத் தாக்கிய நபர் கைது...!!

ஆக்லாந்து பேருந்துகளில் பெண்களை அநாகரீகமாகத் தாக்கிய நபர் கைது...!!

ஆக்லாந்து பேருந்துகளில் பெண்களை அநாகரீகமாகத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில் கிழக்கு ஆக்லாந்தின் Botany மற்றும் Britomart இடையே பேருந்து வழித்தடம் 70 இல் நடந்த இந்த தாக்குதல்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 51 வயதுடைய நபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்தக் கைது இந்த வழித்தடத்தில் பயணிக்கும் மக்களுக்கு உறுதியளிக்கும் என்று நம்புவதாக Detective Senior Sergeant Dean Batey தெரிவித்தார்.

அந்த நபருக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதை நிராகரிக்க முடியாது என்று பேடி கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்