Breaking News

'ரைடு ஆன்' - 68 வயதில் அட்டகாசமான நடிப்பில் மீண்டும் ஜாக்கிசான்..!!

'ரைடு ஆன்' - 68 வயதில் அட்டகாசமான நடிப்பில் மீண்டும் ஜாக்கிசான்..!!

மூத்த நடிகரும் அதிரடி நட்சத்திரமான ஜாக்கிசான் புகழ்பெற்ற தற்காப்புக் கலைஞர் புரூஸ் லீயின் மிகப்பெரிய ரசிகராவார்.

புரூஸ் லீக்கு பிறகு பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளால் கவர்ந்த ஜாக்கி சான் நடிக்கும் புதிய படம் 'ரைடு ஆன்'.

இது நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படம். இதில் தற்போது 68 வயதாகும் ஜாக்கி சான் தனது வயதை மீறிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

2020ல் வெளியான வான்கார்ட் படத்திற்கு பிறகு வெளிவர இருக்கும் ஜாக்கி சான் படம் இது.

சினிமாவில் இருந்து விலகிய ஒரு சண்டைபயிற்சியாளர் மற்றும் அவரது குதிரையின் கதையைச் சொல்லும் படம் 'ரைடு ஆன்'.

ஏப்ரல் 7 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.