Breaking News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; அதிமுக வேட்பாளரை அறிவித்த இபிஎஸ் - ஓபிஎஸ் யாரை அறிவிப்பார்...?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; அதிமுக வேட்பாளரை அறிவித்த இபிஎஸ் - ஓபிஎஸ் யாரை அறிவிப்பார்...?

இந்தியா: தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பெப்ரவரி 27ஆம் திகதி நடைபெறுகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் அணியின் வேட்பாளரை அறிவித்து வருகின்றன.

இதனிடையே அதிமுக கட்சி இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு யாரை வேட்பாளராக அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இவர் அறிவித்தால் ஓ பன்னீர் செல்வம் போட்டி வேட்பாளரை அறிவிப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் கே.எஸ். தென்னரசு கடந்த 2001 , 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராகவும் இருக்கிறார். தென்னரசு 25 ஆண்டுகளாக ஈரோடு சுமை தூக்குவோர் மத்திய சங்க பொதுச் செயலாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.