Breaking News

அசீம் பற்றி தெரிந்தும் இந்த ஹவுஸ்மேட்ஸ் ஏன் இப்படி செஞ்சாங்க...??

அசீம் பற்றி தெரிந்தும் இந்த ஹவுஸ்மேட்ஸ் ஏன் இப்படி செஞ்சாங்க...??

பிக் பாஸ் 6 சீசனில் முதல் முறையாக நேற்று டபுள் எவிக்ஷன் நடந்தது. ராம் மற்றும் ஆயிஷா ஆகியோரை வெளியேற்றினார்கள்.

இதையடுத்து இந்த வாரத்திற்கான எவிக்ஷனுக்காக ஹவுஸ்மேட்ஸ் சிலரின் பெயர்களை பரிந்துரை செய்திருக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற இரண்டு நபர்களை எவிக்ஷனிற்கு தேர்வு செய்து சொல்லணும் என பிக் பாஸ் கூறுவதுடன் ப்ரொமோ வீடியோ துவங்கியிருக்கிறது.

மைனா நந்தினி, அமுதவாணன், விக்ரமன் ஆகியோர் மணிகண்டனின் பெயரை பரிந்துரை செய்துள்ளனர்.

ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டன், தனலட்சுமி ஆகியோர் விக்ரமனை நாமினேட் செய்துள்ளனர்.

ஏ.டி.கே., அசீம் ஆகியோர் ரச்சிதா மகாலட்சுமியை எவிக்ஷனுக்காக நாமினேட் செய்திருக்கிறார்கள்.

ஷிவின், கதிரவன், ஏ.டி.கே., மணிகண்டன் ஆகியோர் அசீமின் பெயரை தெரிவித்துள்ளனர்.

அசீம் பெயரை பலரும் நாமினேட் செய்தாலும் இந்த வாரம் அவரை மட்டும் பிக் பாஸ் வெளியேற்ற மாட்டார் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

அசீமும், தனலட்சுமியும் தான் கன்டன்ட் கொடுத்து வருகிறார்கள். அதனால் அவர்களை கடைசி வரை தங்க வைத்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். இது தெரியாமல் ஹவுஸ்மேட்ஸ் அசீமை போய் நீமினேட் செய்திருக்கிறார்கள் என பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் மேலும் கூறியிருப்பதாவது, இந்த வாரம் ஷிவினை யாரும் நாமினேட் பண்ணவில்லையா?

விக்ரமனை நாமினேட் செய்ததில் மகிழ்ச்சி. இந்த வாரமாவது அவர் டாஸ்க்கை சீரியஸாக செய்ய வேண்டும். அசீமுக்கு பார்வையாளர்களிடம் அமோக வரவேற்பு இருப்பது தெரிந்துமா ஷிவின் அவரை நாமினேட் செய்திருக்கிறார்? என தெரிவித்துள்ளனர்.