Breaking News

காணமல் போன ஆக்லாந்து பெண்ணை தீவிரமாக தேடும் பொலிஸார்...!!!

காணமல் போன ஆக்லாந்து பெண்ணை தீவிரமாக தேடும் பொலிஸார்...!!!

செப்டம்பர் 30 ஆம் திகதி அதிகாலை முதல் காணாமல் போன 21 வயது ஆக்லாந்து பெண்ணை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அமீ-ஜேன் ஸ்மித் என்ற குறித்த பெண் St Heliers இல் இருந்து அதிகாலையில் காணாமல் போனார்.

அதே நாளில் மீடோபேங்க் பகுதியில் பதிவான CCTV கட்சிகளில் இருந்து அவரது புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அவளது குடும்பம், நண்பர்கள் மற்றும் போலீசார் அவளது நலனில் தீவிர அக்கறை கொண்டுள்ளனர்.

மேலும் அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறார்கள்.

இந்நிலையில் அவளைப் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு 220930/4710 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.