Breaking News

உடலை உறைய வைக்கும் குளிரில் இராணுவ வீரர்கள் ஆடிய நடனம்...!!

உடலை உறைய வைக்கும் குளிரில் இராணுவ வீரர்கள் ஆடிய நடனம்...!!

இந்திய எல்லையில் நாட்டை பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இராணுவ வீரர்கள், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக அயராது பணியாற்றி வருகின்றனர்.

இமயமலையில் நிலவும் குளிரை சமாளிக்க உடல் வலிமை மட்டுமல்லாது, மன வலிமையும் மிக அவசிமாகிறது.

இத்தகைய சூழலில் உடற்பயிற்சி, நடனம் ஆகியவை இராணுவ வீரர்களின் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது.

அந்த வகையில் வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உறைய வைக்கும் குளிரில் பணியாற்றி வரும் இராணுவ வீரர்கள், தங்கள் கலைப்பை போக்கும் வகையில் பாரம்பரிய ‘குக்ரி’ நடனத்தை ஆடினர்.

இந்த நடனம் வீரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. கூர்கா மக்களின் ஆயுதமான சிறிய வகை கத்தியை கைகளில் ஏந்தியபடி இராணுவ வீரர்கள் ஆடிய காணொலியை இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.