Breaking News

தபால் ஊடாக பொதிகளை விநியோகிக்கும் புதிய திட்டம்

தபால் ஊடாக பொதிகளை விநியோகிக்கும் புதிய திட்டம்

பொதிகள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் திட்டம் தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய பொருட்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் பணத்தை செலுத்தும் வகையில் இந்த சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளதுடன் கணினி மயப்படுத்தப்பட்ட தபால் அலுவலகங்கள் ஊடாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதனூடாக சந்தைகளுக்கு செல்வதை தவிர்த்து தமக்கு தேவையான பொருட்களை மக்கள் வீடுகளிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டத்தில் 50,000 ரூபா வரையான பெறுமதியுடைய பொருட்களை வீடுகளில் பெற்றுக்கொள்வதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ,முதல் கட்டத்தில், பணக்கொடுக்கல் வாங்கல் மாத்திரமே முன்னெடுக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் காலத்தில் கடன் அட்டைகளுக்கும் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.