Breaking News

Hawke's Bay இல் துப்பாக்கிச்சூடு - இருவர் கைது

Hawke's Bay இல் துப்பாக்கிச்சூடு - இருவர் கைது

நேற்று இரவு Hawke's Bay இல் ஒரு வாகனத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் நேப்பியருக்கு வடமேற்கே 40 கி.மீ தொலைவில் உள்ள டெ பெஹூவில் மாநில நெடுஞ்சாலை 5 இல் நடந்த இந்த சம்பவம் குறித்து இரவு 8.15 மணியளவில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குறித்த தாக்குதலில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மற்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என போலீசார் மேலும் தெரிவித்தனர்.