Breaking News

48 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளின் அநாகரீகமான புகைப்படங்களை தனது தொலைபேசியில் வைத்திருந்த நபர்

48 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளின் அநாகரீகமான புகைப்படங்களை தனது தொலைபேசியில் வைத்திருந்த நபர்

பீட்டர் ஜோசப் ப்ரூம் என்ற நபர் ஒருவர் தற்செயலாக தன்னுடன் பணியாற்றும் ஒருவரிடம் ஒரு குழந்தையின் புகைப்படத்தை ‘ஆடைகள் இன்றிய நிலையில்’ காட்டிய பின்னர், போலீசார் அவரது வீட்டில் சோதனைகளை மேற்கொண்டு மேலும் பல படங்களை கண்டுபிடித்துள்ளனர்.

47 வயதான குறித்த நபர் இன்று நெல்சன் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

போலீசார் ப்ரூமின் வீட்டில் மடிக்கணினி மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களைக் கைப்பற்றினர்.

மடிக்கணினி மற்றும் தொலைபேசியில் “குழந்தை மாடலிங்” புகைப்படங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

மடிக்கணினியில் ஒரு கோப்புறையில் 6 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் 248 புகைப்படங்கள் காணப்பட்டதுடன் ப்ரூமின் தொலைபேசியில் 48,000 புகைப்படங்கள் காணப்பட்டன.

இந்நிலையில் "நான் அதை முதலில் செய்திருக்கக்கூடாது எனவும் தனக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன எனவும் ப்ரூம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி டோனி சோஹ்ராப் ப்ரூமை குற்றவாளி என்று தீர்ப்பளித்ததுடன் அவருக்கு எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.