Breaking News

பெப்டைட் ரெசெப்டோ ரேடியோனூக்ளைட் தெரபி சிகிச்சைக்கு இனி ஆஸ்திரேலியா செல்ல தேவையில்லை

பெப்டைட் ரெசெப்டோ ரேடியோனூக்ளைட் தெரபி சிகிச்சைக்கு இனி ஆஸ்திரேலியா செல்ல தேவையில்லை

புற்றுநோயின் ஒரு அரிய நோய் வடிவமான மெட்டாஸ்டேடிக் நியூரோஎண்டோகிரைன் கட்டிகள் (NET -metastatic neuroendocrine tumours) கொண்ட நியூசிலாந்தர்கள் இனி சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா செல்ல வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்டைட் ரெசெப்டோ ரேடியோனூக்ளைட் தெரபி (Peptide Recepto Radionuclide Therapy) சிகிச்சை நியூசிலாந்தில் இனி நிரந்தரமாக கிடைக்கும் என்று சுகாதார அமைச்சர் ஆண்ட்ரூ லிட்டில் இன்று அறிவித்தார், ஆனால் இது குறித்த சரியான திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் புதிய தேசிய புற்றுநோய் சிகிச்சை சேவையின் கீழ் ஆக்லாந்து நகர மருத்துவமனையில் இந்த சிகிச்சை அளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.