Breaking News

தலைதூக்கும் சுவாச வைரஸ்களின் தாக்கம் - குழந்தைகளை வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

தலைதூக்கும் சுவாச வைரஸ்களின் தாக்கம் - குழந்தைகளை வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

சுவாச வைரஸ்களின் தாக்கம் எழுச்சி பெற்றுள்ளதால் எல்லா குழந்தைகளையும் வீட்டிலேயே வைத்திருக்கும்படி பெற்றோர்களிடமும் பராமரிப்பாளர்களிடமும் ரோட்டோருவா மருத்துவமனை கேட்டுக்கொண்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் கடந்த திங்கட்கிழமை 48 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டதாக Lakes மாவட்ட சுகாதார வாரியம் தெரிவித்துள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு குழந்தைகள் உட்பட, குறைந்தது 13 குழந்தைகள் மருத்துவமனையில் சுவாச வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி ஆலன் வில்சன், வைரஸ் பரவாமல் தடுக்க ED, குழந்தைகள் பிரிவு, சிறப்பு பராமரிப்பு குழந்தை பிரிவு (SCBU) மற்றும் ICU க்குள் பார்வையாளர் வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படுகின்றன என தெரிவித்தார்.

பார்வையாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நாங்கள் முயற்சிக்க வேண்டும், நோய் தாக்கம் இல்லாத குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க வலுவாக ஊக்குவிப்போம்."

சுகாதார வழிகாட்டுதலின் கீழ், ஒரு குழந்தை நோயாளியின் பெற்றோர் அல்லது முதன்மை பராமரிப்பாளர்கள் இருவரும் பகலில் இருக்க முடியும், மேலும் ஒருவர் மட்டும் இரவில் தங்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சுவாச வைரஸ் நோய் அறிகுறிகள் - இருமல்,காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தலைவலி,மூச்சுத்திணறல்,மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் ஆகியவை அடங்கும்.

அறிகுறிகளுடன் சமூகத்தில் உள்ள குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும், மற்ற குழந்தைகளுடன் பொது இடங்களில் சேர அனுமதிக்க கூடாது என்று Lakes DHB அறிவத்துள்ளது.

தொற்று தொடுகை மற்றும் இருமல் / தும்மல் மூலம் பரவுகிறது,எனவே பார்வையாளர்கள் குழந்தைகளையோ அல்லது சுவாச வைரஸ் தாக்கம் உள்ள பகுதிகளில் உள்ளவர்களை முத்தமிடவோ அல்லது தொடவோ கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.