Breaking News

சைபர் தாக்குதலுக்குள்ளான Kaseya - நியூசிலாந்து நிறுவனங்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்

சைபர் தாக்குதலுக்குள்ளான Kaseya - நியூசிலாந்து நிறுவனங்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்

ஒரு அதிநவீன உலகளாவிய ransomware தாக்குதலில் நியூசிலாந்து நிறுவனங்கள் சிக்கியிருக்கலாம் என ஒரு தகவல் பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.

இந்த சைபர் தாக்குதல் மியாமியை (Miami) தளமாகக் கொண்ட IT நிறுவனமான Kaseya வை தாக்கியதுடன் அந்த நிறுவனத்தின் மென்பொருளைப் பயன்படுத்தி நிறுவனங்களுக்குள் ஊடுருவியது.

டேனியல் ஐயர்ஸ் தெரிவிக்கையில் இந்த வகையான தாக்குதல் "விநியோகச் சங்கிலி" தாக்குதல் என குறிப்பிடலாம், மேலும் நியூசிலாந்தில் பல தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் Kaseya வை பயன்படுத்துகின்றனர் என தெரிவித்தார்.

குறித்த தாக்குதலால் நியூசிலாந்திலும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் அந்த சேவையகங்களை மூடுமாறு காசேயாவைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இணைய பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவான CertNZ அறிவுறுத்துகிறது.

நிர்வகிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் (எம்.எஸ்.பி) மற்றும் சிறிய முதல் நடுத்தர வணிகங்களுக்கு (எஸ்.எம்.பி) - நியூசிலாந்தில் வாடிக்கையாளர்களையும் கூட்டாளர்களையும் இணைக்க IT மேலாண்மை மென்பொருளை Kaseya வழங்குகிறது.

Kaseya முன்னர் நியூசிலாந்தை தளமாகக் கொண்ட CodeBlue மற்றும்  BigAir, Datacom, eNerds, Leap Consulting, Surety IT and Ricoh Australia, உள்ளிட்ட பிற ஆஸ்திரேலிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடனான அதன் இணைப்புகளை விளம்பரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது