Breaking News

2021 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டம் இன்று முதல் அமுல்

2021 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டம் இன்று முதல் அமுல்

 

2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட யோசனைகளை வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

அரச சேவையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கான நலன் தொடர்பான யோசனைகள் இவற்றுள் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

இதேவேளை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 97 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, இன்று மாலை வரவு செலவு திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

 

அதனடிப்படையில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 54 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.