Breaking News

இன்வெர்கர்கில் அருங்காட்சியகத்தின் மறுவடிவமைப்பை மேற்பார்வையிட புதிய நிர்வாகக் குழு

இன்வெர்கர்கில் அருங்காட்சியகத்தின் மறுவடிவமைப்பை மேற்பார்வையிட புதிய நிர்வாகக் குழு

இன்வெர்கர்க்கில் (Invercargill) நகர சபை இன்வெர்கர்கில் அருங்காட்சியகத்தின் மறுவடிவமைப்பை மேற்பார்வையிட ஒரு புதிய நிர்வாகக் குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஏழு பேர் கொண்ட குறித்த நிர்வாகக் குழு ஒரு நியமனக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.

மேலும் இந்த புதிய நிர்வாகக் குழு குறித்த அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் அசாதாரண செயல்திறன், கொள்கை மற்றும் கூட்டாளர் குழு கூட்டத்தில் கவுன்சிலர்களால் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கவுன்சில், ஆளுகைக் குழுவை நிறுவுவதற்கும் செயல்படுவதற்கும் 60,000 டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இந்த ஆளுகைக் குழுவின் முக்கிய நோக்கம் "இன்வர்கர்கில் அருங்காட்சியகத்திற்கு ஒரு தனித்துவமான பார்வையை உருவாக்குவதாகும்.