Breaking News

37 ஆண்டுகளாக மூக்கில் அடைக்கப்பட்டிருந்த டிட்லிவிங்க்ஸ் (Tiddlywinks)

37 ஆண்டுகளாக மூக்கில் அடைக்கப்பட்டிருந்த டிட்லிவிங்க்ஸ் (Tiddlywinks)

ஆடிங்டனில் வசிக்கும் மருத்துவமனை சமையலறை தொழிலாளியான 45 வயது மேரி மெக்கார்த்தி என்ற பெண் நீண்ட நாட்களாக அவரது மூக்கின் வலது பக்கத்தில் வலியை அனுபவித்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மூக்கின் வழியாக மேற்கொள்ளப்படும் கொவிட் -19 பரிசோதனை ஒன்றை இவர் மேற்கொண்ட பிறகு, அவரது நாசி பிரச்சினைகள் மோசமடைந்தன.

இந்நிலையில் மேரி மெக்கார்த்திக்கு கடந்த புதன்கிழமை மிகுந்த வேதனையுடன் கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றுள்ளார்.

ஒரு சி.டி ஸ்கேன் ஒரு பொருளை அவரது மேல் மூக்கில் வெளிப்படுத்தியது.இதனை தொடர்ந்து அவருக்கு மூக்கில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவைசிகிச்சையில் அவர் மூக்கில் இருந்து மஞ்சள் நிற டிட்லிவிங்க்ஸ் (Tiddlywinks- வட்டு வடிவிலான விளையாட்டு பொருள்) துண்டு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பொருள் அவர் 8 வயதில் விளையாட்டின்போது அவரது மேல் மூக்கில் அடைக்கப்பட்டு பின் 37 ஆண்டுகளாக இருந்துள்ளமை அறுவை சிகிச்சையின் பின்னர் தெரியவந்துள்ளது.

அறுவைசிகிச்சையில் அந்த பொருள் அவரது மூக்கு வழியாகத் தள்ளப்பட்டு அவள் வாய் வழியாக பிரித்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.