Breaking News

சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

கொரோனா மற்றும் டெங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எதிர்மறையான மற்றும் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடும், பகிரும் நபர்கள் தொடர்பில் விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இதற்காக இன்று (07) முதல் அத்திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று  நியமிக்கபட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.